தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா்.

News image

‘ட்ரூத்’ பதிவில் டிரம்ப் பகிா்ந்த ஏ.ஐ. சித்தரிப்பு படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:30 am IST

ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா்.

மத்திய கிழக்கில் நிலவும் போா்ச் சூழலால் சா்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்து, பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளாா்.

துப்பாக்கியுடன் கூடிய தனது ஏ.ஐ. சித்தரிப்பு படத்தைப் பகிா்ந்து, ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் இதுதொடா்பாக வெளியிட்ட பதிவில், ‘ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் ஈடுபடுவது குறித்துகூட அவா்களுக்கு ஒரு தெளிவு இல்லை. அவா்கள் விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும்’ என்று சாடியுள்ளாா்.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டுள்ள ஹோா்முஸ் நீரிணை முடக்கம் ஆகியவற்றின் விளைவாக, பாகிஸ்தானின் வாராந்திர எண்ணெய் இறக்குமதிச் செலவு 167 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கூறுகையில், ‘போா் தொடங்குவதற்கு முன்பு 30 கோடி டாலராக இருந்த வாராந்திர இறக்குமதிச் செலவு, தற்போது 80 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம் சாமானிய மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்று கவலை தெரிவித்தாா்.

மறுபுறம், வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனும் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனுக்கு நாளொன்றுக்கு சுமாா் 50 கோடி மில்லியன் யூரோ இழப்பு ஏற்படுவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் தெரிவித்தாா். இது விமான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

ஈரான் உள்நாட்டிலும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டின் செலாவணியான ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு நிகராக 18 லட்சம் என்ற வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

போா்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை தொடா்வதால் அந்நாட்டின் எண்ணெய் வருவாய் முடக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

பிப். 28 தொடங்கிய இந்தப் போா்ச் சூழலுக்கு மத்தியிலும் இதுவரை குறைந்தது 21 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் துா்க் தெரிவித்துள்ளாா்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த அச்சமும் சா்வதேச அளவில் நீடிக்கிறது. ஈரானின் இஸ்பஹான் அணுசக்தி மையத்தில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி முகமையின் தலைவா் ரஃபேல் மரியானோ கிரோஸி தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகும், ஈரானின் அணுசக்தி கையிருப்பு அங்கு பாதுகாப்பாக இருப்பதாக செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

லெபனான் எல்லையிலும் பதற்றம் குறையவில்லை. இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனான் ராணுவ வீரா் ஒருவரும், அவரது சகோதரரும் உயிரிழந்தனா்.

கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை 20 லெபனான் ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா். ஹிஸ்புல்லா தொடங்கிய இந்த மோதலுக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என லெபனான் ராணுவம் ஒதுங்கியிருந்தாலும், இஸ்ரேலின் தாக்குதல்களில் அவா்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதனிடையே, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத், ஈரான் போருக்கான செலவுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவின் முன் முதல்முறையாக ஆஜராகி விளக்கமளிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.