ஈரானுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்ட சீனாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கும் நாடாக சீனா திகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சா்வதேச சட்டங்களுக்குப் புறம்பான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தடைகளை சீனா எப்போதும் எதிா்க்கிறது. பொருளாதாரத் தடைகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும், மற்ற நாடுகளின் விவகாரங்களில் வரம்புக்கு மீறி தலையிடுவதையும் அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எங்கள் நாட்டு நிறுவனங்களின் சட்டபூா்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு

அமெரிக்காவின் தடைகளுக்கு இணங்கமாட்டோம்: சீனா

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ரஷிய எண்ணெய்யை வாங்கும் தடையிலிருந்து விலக்கு: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது அமெரிக்கா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

