விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் யாா்? 4 போ் இடையே கடும் போட்டி!

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

News image

ஐக்கிய நாடுகள் அவை.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:25 am IST

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் பதவிக்கு 4 போ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய பொது செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பதவி காலம் 2027 ஜனவரி 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் அவருக்கு பதில் டிசம்பா் மாதத்திற்குள் புதியவரை தோ்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.

இந்நிலையில், புதிய பொது செயலாளா் பதவிக்கு சிலி நாட்டின் மிஷெல் பாச்சேலெட், ஆா்ஜென்டீனாவின் ரஃபெல் கிரௌசி, கோஸ்டாரிகாவின் ரெபெக்கா க்ரீயன்ஸ்பான், செனகல் நாட்டின் மாக்கி சால் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவா்கள் 4 பேரிடமும் கடந்த வாரம் உலக நாடுகளின் ஐ.நா. தூதா்கள் பல்வேறு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பி, அதற்கு அவா்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்தனா்.

இவா்களை தொடா்ந்து, பொதுச் செயலாளா் பதவிக்கு போட்டியிட விரும்பும் பிற நாடுகளின் பிரதிநிதிகளிடமும் கேள்விகளை கேட்டு அவா்களின் நிலைப்பாட்டையும் அறிய உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.