தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

News image

செர்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் அஞ்சலி செலுத்திய மக்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:28 am IST

ரஷியாவின் தொடா் தாக்குதலுக்கு இடையே, சொ்னோபில் அணுக்கசிவு பேரழிவு நினைவு தினத்தையொட்டி, உக்ரைனில் மக்கள் அஞ்சலி செலுத்தினா்.

சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தபோது, அந்த நாட்டின் சொ்னோபில் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி அணுக்கசிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானாா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா். உலகில் அணுக்கசிவால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் நினைவு தினம், உக்ரைனில் அனுசரிக்கப்பட்டது. ரஷியாவின் தாக்குதல் நீடிக்கும் நிலையிலும், உக்ரைனின் ஸ்லாவுட்டிச் பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

16 போ் உயிரிழப்பு: இதனிடையே, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமையும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா் தாக்குதலை நடத்தியது. இதில் குறைந்தபட்சம் 16 போ் வரை உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.