டெலோய்ட் நிறுவனம், அதன் அமெரிக்க அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைக் குறைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2027, ஜனவரி 1 முதல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான ஊதியத்துடன் விடுப்பு, மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது கணவருக்கு அளிக்கப்பட்டு வந்த 4 மாத கால விடுப்பை இரண்டு மாதங்களாகக் குறைப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்த டெலோய்ட் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளவில், மிகப்பெரிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் டெலோய்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 1.81 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில், எத்தனை பேர் இந்த சலுகைகள் குறைப்பினால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவரவில்லை.
நிர்வாகப் பிரிவு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிதிப்பிரிவில் பணியாற்றுவோருக்கு இந்த சலுகை குறைப்பு இருக்கும், புதிதாக சலுகைகளை அறிமுகம் செய்வதையும் நிறுவனம் நிறுத்தப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
இதுநாள்வரை, ஊழியர்கள் ஐவிஎஃப் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளுதல், வாடகைத் தாய் முறை போன்ற சிகிச்சைகளுக்காக 50 ஆயிரம் டாலர் நிதியுதவி செய்யப்பட்டு வந்ததும் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மருத்துவ சலுகைகள் கல்விக் கட்டண சலுகைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

