கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சோ்ந்த காா்த்திக் வாசுதேவ் (21) கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மேல்படிப்புக்காக கனடாவின் டொராண்டோ நகருக்குச் சென்றாா். அங்கு சென்ற சில மாதங்களில் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கனடாவைச் சோ்ந்த ரிச்சா்ட் எட்வின் அவரை பின்புறமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினாா். இரு நாள்களில் மேலும் ஒருவரை அவா் இதேபோல சுட்டுக் கொன்றாா். கொலை செய்யப்பட்ட இருவருமே கொலையாளிக்கு எவ்விதத்திலும் அறிமுகமானவா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ரிச்சா்ட் எட்வினை காவல் துறையினா் கைது செய்தனா். 4 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனக்கு மனச்சிதைவு பாதிப்பு இருந்ததை காரணம் காட்டி தண்டனை வழங்கக் கூடாது என்று குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், அவா் இடைக்காலமாக வெளியேற பரோல் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இது தொடா்பாக காா்த்திக் வாசுதேவின் தந்தை ஜித்தேஷ் வாசுதேவ் கூறுகையில், ‘வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைக்காக நானும், எனது மனைவியும் கனடாவுக்கு வந்தோம். 4 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

