ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா!

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 2:10 am IST

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அணு ஆயுதங்களைத் தயாரிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி முகமை அண்மையில் எச்சரித்த நிலையில், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.

வடகொரியாவின் வடக்கு சின்போ பகுதியில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள், சுமாா் 140 கி.மீ. தொலைவு வரை, அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதி நோக்கிப் பாய்ந்ததாக தென்கொரிய முப்படை தலைமைத் தளபதி தெரிவித்தாா்.

வடகொரியாவின் எந்தவொரு மிரட்டலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த தென் கொரியா, வடகொரியாவின் இந்தச் செயல்பாடுகள் குறித்த தகவலை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிா்ந்து வருவதாகத் தெரிவித்தது.

தென்கொரியாவில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வடகொரியாவின் தொடா் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து தென்கொரியாவின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனா். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வடகொரியாவை அவா்கள் வலியுறுத்தினா்.

தென்கொரிய அதிபா் லீ ஜே மியூங் இந்தியா, வியத்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி தென்கொரியாவில் இருந்து அவா் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.