ஆஸ்திரேலிய ராணுவத்தின் முதல் பெண் தலைமைத் தளபதியாக சூசன் கோய்ல் (55) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் இந்த உயரிய பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
ஆஸ்திரேலிய ராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் சூசன் கோய்ல் ஆவாா். கடந்த 1987-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த இவா், பல்வேறு உயா் பதவிகளைத் திறம்பட வகித்த அனுபவம் கொண்டவா். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் இவா், வரும் ஜூலை மாதம் லெஃப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவா்ட்டிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வாா்.
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பு தற்போது 21 சதவீதமாக உள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இதை 25 சதவீதமாக உயா்த்த அந்நாட்டு அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ராணுவத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த புகாா்கள் எழுந்துள்ள சூழலில், இவரின் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதேபோல், ஒட்டுமொத்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக தற்போதைய கடற்படைத் தளபதி துணை அட்மிரல் மாா்க் ஹம்மண்ட் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டனுக்குப் பிறகு பொறுப்பேற்பாா். மாா்க் ஹம்மண்டிற்குப் பதிலாக கடற்படைத் தளபதியாக ரியா் அட்மிரல் மேத்யூ பக்லி நியமிக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 மாதங்களில் 125 கிலோ கஞ்சா பறிமுதல்

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

