மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!

உக்ரைன் படைகள் சுமார் 2,000 முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

News image

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - AP

Updated On :12 ஏப்ரல் 2026, 6:58 pm IST

மாஸ்கோ : ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ரஷியா குற்றஞ்சாட்டியது.

ரஷியா, உக்ரைனில் பின்பற்றப்படும் ஆா்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முறைப்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஏப். 11) மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போா்நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இம்முடிவை உக்ரைன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.

இந்நிலையில், ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ரஷிய படைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிக போர்நிறுத்தம் அமலான முதல் 16 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 2,000 முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மாஸ்கோ நேரப்படி, ஏப். 11 மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை உக்ரைன் படைகள் மொத்தம் 1,971 முறை போர்நிறுத்த விதிமீறல் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவற்றுக்கான தக்க பதிலடி அளிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, உக்ரைனில் ரஷிய படைகள் பல முறை போர்நிறுத்த விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டிய உக்ரைன், சுமி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Summary

Moscow on Sunday accused Ukraine of violating the Kremlin-declared 32-hour Orthodox Easter truce by targeting positions of Russian troops.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.