மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து...

News image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - IANS

Updated On :12 ஏப்ரல் 2026, 8:13 am IST

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (ஞாயிற்றுக்கிழமை ஏப்.12) தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது.  தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.

இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா வைத்த முன் நிபந்தனைகள் காரணமாக பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தொடங்காமல் சனிக்கிழமை (ஏப்.11) தாமதமாகத் தொடங்கியது.

இந்தப் பேச்சுவார்தையை நடத்தும் அமெரிக்க குழுவுக்கு அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் குழுவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பகேர் கலிபாஃப் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர். 

அமெரிக்க குழுவில் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ஈரான் குழுவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி அக்பர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், ”நாங்கள் 21 மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஈரானியக் குழுவுடன் பலமுறை கலந்துரையாடினோம். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இது அமெரிக்காவுக்கு ஒரு கெட்ட செய்தி என்பதை விட, ஈரானுக்குத்தான் அதிக கெட்ட செய்தியாகும். நாங்கள் பாகிஸ்தானிலிருந்து புறப்படுகிறோம்” எனத் தெரிவித்தார்.

Summary

US Vice President J.D. Vance stated on Sunday (April 12) that the peace talks between Iran and the United States have ended in failure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.