அமெரிக்காவுடன் 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், அந்நாட்டு கடற்படையை அழிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்டவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
இதனால் மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அமெரிக்க-ஈரான்-பாகிஸ்தானின் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை தொடங்கியது.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப் ஆகியோா் தலைமையிலான இருநாடுகளின் குழுக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
சுமார் 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நள்ளிரவு நிறைவுபெற்றதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் எழுத்துப்பூர்வ ஆவணங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு எட்டப்படாத சில விஷயங்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கருத்து வேறுபாடு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னா், அமெரிக்கா - ஈரான் இடையே முதல்முறையாக நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
14-Hour Peace Talks Between Iran and the US Conclude!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


