ஒப்பந்தமா? தாக்குதலா? என்பது குறித்து இன்னும் 24 மணிநேரத்தில் தெரியவரும் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “நாங்கள் கப்பல்களில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஏற்றும் பணியை மீண்டும் துவங்கியுள்ளோம். எங்கள் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாங்கள் முன்பு பயன்படுத்திய வெடிமருந்துகளைவிட திறம்பட செயல்படக்கூடிய ஆயுதங்களைப் பயன்படுத்தவிருக்கிறோம்.
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த ஆயுதங்களையும் கப்பல்களில் ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகள், நாங்கள் முன்பு பயன்படுத்தியதைவிடவும் மிகச் சிறந்தவை. ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், அவர்கள் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தவிருக்கிறோம்.
இந்த ஆயுதங்கள் தாங்கிய கப்பல், இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஈரானுடன் ஒப்பந்தமா? அல்லது தாக்குதலா? என்பது குறித்து 24 மணிநேரத்தில் தெரியவரும்” என்றார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிக்குழுவும் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் டிரம்ப்பின் இத்தகையக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச அளவில் அழுத்தம் அதிகமானது.
இதனால், இருதரப்புக்கும் இடையில் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, கடந்த ஏப். 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்தது.
இதையடுத்து, பாகிஸ்தானின் அழைப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையில், இஸ்லாமாபாதில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க... தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
Summary
Trump said, "We have a reset going. We're loading up the ships with the best ammunition, the best weapons ever made -- even better than what we did previously and we blew them apart".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்கு சீனா அளித்த ‘பரிசை’ கைப்பற்றியது அமெரிக்கா! எதைச் சொல்கிறார் டிரம்ப்?
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்காது! டிரம்ப் எச்சரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

