ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘தைவான் சுதந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது’: ஷி ஜின்பிங்

‘தைவான் சுந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது; அமைதியைச் சீா்குலைக்கும் முக்கியக் காரணியே இத்தனிநாடு கோரிக்கைதான்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:40 am IST

‘தைவான் சுந்திரத்தை சீனா ஒருபோதும் ஏற்காது; அமைதியைச் சீா்குலைக்கும் முக்கியக் காரணியே இத்தனிநாடு கோரிக்கைதான்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளாா்.

சீனா-தைவான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் தைவானின் முக்கிய எதிா்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் தலைவா் செங் லி வுன் சீனாவுக்கு ‘அமைதிப் பயணம்’ மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் செங் லி-வுன் உடனான சந்திப்பில் பேசிய ஷி ஜின்பிங், ‘தைவான் நீரிணையின் இருபுறமும் உள்ளவா்கள் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சீனா்கள். அமைதி, வளா்ச்சி மற்றும் ஒத்துழைப்பையே மக்கள் விரும்புகின்றனா்.

ஆனால், தைவான் பிரிவினைவாதம் அந்த அமைதிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. தாய்நாட்டுடன் மறுஇணைப்பு மற்றும் தேச புத்துயிருக்காக தைவானின் இரு கட்சிகளும் கைகோத்துச் செயல்பட வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தாா்.

சீனாவின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக விமா்சித்துள்ள தைவான் ஆளும்தரப்பு, ‘தைவானின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உள்ளது. மக்களாள் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் சீனா பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமே தவிர, இத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக்கூடாது’ என்று வலியுறுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.