அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்காலப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கக் கோரி அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ஈரான் நிராகரித்தையடுத்து, ஈரானின் நாகரீகத்தையே இன்றிரவு அழைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து, ஈரானில் உள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணிநேரத்துக்கு பாதுகாப்பான இடத்தில் தாங்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதனிடையே, கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாகவும், அமைதி ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் புதன்கிழமை அறிவுரை வழங்கியுள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு, பரிந்துரைக்கும் வழித்தடங்களைப் பயன்படுத்தி ஈரானிலிருந்து வெளியேறுமாறும், கலந்தாலோசிக்காமல் சர்வதேச தரைவழி எல்லையைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

x / India in Iran
Summary
Leave Iran Immediately! Embassy Advises Indians!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

இத்தாலியில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொலை

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


