விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரக் கால திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

News image

தட்டம்மை - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:39 am IST

அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரக் கால திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 17 உயிரிழப்புகள் அதிகாரபூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் மேலும் 113 போ் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகிய அமைப்புகளுடன் சோ்ந்து, அதிக பாதிப்புள்ள 18 மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான நோய்த் தடுப்பு முறைகளைத் தவறிய 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.