அமெரிக்காவால் இடிக்கப்பட்ட பாலங்களை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அவர்களை (அமெரிக்கா) கடுமையாக பாடம் புகட்டுவதற்கான காலம் மீண்டும் ஒருமுறை வராது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி, ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவங்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் உச்சத்தலைவரும், ஈரானின் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது குடும்பத்தினர், ராணுவ உயரதிகாரிகள் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீதும், இஸ்ரேல் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
5-வது வாரமாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததன் காலக்கெடு நிறைவு பெறவுள்ள நிலையில், பாலங்கள், எரிசக்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரஜ் பகுதியில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளின் மிக உயரமான பாலம் என்ற பெருமை கொண்ட பி1 பாலத்தை அமெரிக்க கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி அழித்தனர்.
இரண்டு முறை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், முதலில் பாலம் தகர்க்கப்பட்டு, அடுத்த தாக்குதலில், அங்கிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “அமெரிக்காவால் இடிக்கப்பட்ட பாலங்களை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அவர்களை (அமெரிக்கா) கடுமையாக பாடம் புகட்டுவதற்கான காலம் மீண்டும் ஒருமுறை வராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்பாஸ் மற்றும் டிரம்ப்பின் பேச்சுகள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
Summary
Amid escalating tensions with the United States, Iranian Foreign Minister Abbas Araghchi has issued a stern statement. He declared that teaching America a lesson is now Iran’s primary objective.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

பிடிவாதம் தளர வேண்டும்!
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

