எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தானில் இன்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை வழியாக எரிபொருள் சரக்கு கப்பல்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, அலுவலக வேலை நாள்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இருப்பினும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நீடித்து வருவதால், பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் திங்கள்கிழமை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்துக்கு பிறகு பொதுமுடக்கம் தொடர்பான அறிவிப்பை ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”பெட்ரோலியப் பொருட்கள், எரிசக்தி பொருள்களை சேமிக்கும் வகையில், பஞ்சாப், கைஃபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்கித்-பால்டிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகள், கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடப்படும்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோட்டத் தலைமையிடங்களில் அமைந்துள்ள சந்தைகள், கடைவீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் மட்டும் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும். அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களை விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் அனைத்து வகையான வணிக வளாகங்களும் இரவு 8 மணிக்கே மூடப்படும்.
டீக்கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவை இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். மருந்துக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
இந்த கட்டுப்பாடு இன்று (ஏப்ரல் 7) இரவு முதல் மறுஅறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Fuel Crisis! Nighttime Lockdown Imposed in Pakistan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

