தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி கொல்லப்படதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

News image

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி - X

Updated On :6 ஏப்ரல் 2026, 3:33 pm IST

ஈரான் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமி கொல்லப்படதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மஜீத் கதேமியைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய கட்ஸ், ”ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் பொதுமக்களைக் கொன்று வருகின்றனர். நாங்கள் அந்த பயங்கரவாதிகளின் தலைவர்களை ஒழித்து வருகிறோம்.

ஈரான் தலைவர்கள் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம்.

ஈரானின் பெட்ரோகெமிக்கல் நிலையங்கள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளோம்.

ஈரானின் தேசிய உள்கட்டமைப்பை தொடர்ந்து சிதைப்போம். இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி பயங்கரவாதத்தை வளர்க்கும் அரசை ஒழித்துக்கட்டுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் காலக்கெடு விதித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர் தாக்குதல்களை நடத்தி பொதுமக்களைக் கொல்வதாக செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டது ஈரானுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Summary

Israel says it killed Revolutionary Guard intel chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.