சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்டெமிஸ்-2 விண்கலம், இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஏப்.2) அதிகாலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையத்தில் (நாசா) இருந்து நிலவிற்கு மனிதனை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை கடந்த 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் பயணத்தின் மூலம் பெற்றிருந்தது.
அதன்பிறகு அந்நாடு மனிதனை விண்வெளிக்கு அனுப்பாதது ஏன்? என்ற அரைநூற்றாண்டுகளாக நிலவி வந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலத்தின் மூலமாக 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர், இன்று அதிகாலை ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்திய நேரப்படி, செவ்வாய்கிழமை அன்று அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியன் விண்கலமானது கரும்புகையைக் கக்கிக்கொண்டு அமெரிக்க நேரப்படி, மாலை 6.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த ஆய்வாளர்கள் ஓரியன் விண்கலத்தில் 2,52,000 மைல்கள் (4,06,000 கி.மீ.) தூரம் பயணிக்க உள்ளனர். இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதைவிட பூமியிலிருந்து கூடுதல் தொலைவுக்குச் செல்லும் முயற்சியாக திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணில் பாய்ந்த ஓரியன் விண்கலம். - படம்: ஏபி.
இதுவரை இல்லாத புதிய முயற்சியாக ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவில் தலைவர் ரீட் வைஸ்மேன், கருப்பினத்தைச் சேர்ந்த பைலட் விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக், கனடா நாட்டைச் சேர்ந்த ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் கிறிஸ்டினா கோக் நிலவுக்கு செல்லும் முதல் பெண் விண்வெளி வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.
சுமார் 10 நாள்கள் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தக் குழுவினர் இதுவரை இல்லாத வகையில் சுமார் 40,000 கி.மீ. வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பசிபிக் பெருங்கடலில் வந்திறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டெமிஸ் 2 பயணம் வெற்றி பெற்றால், அடுத்ததாக ஆர்டெமிஸ் 3 என்ற திட்டத்தில், மனிதர்களை நிலவின் தென் துருவத்தில் இறக்கி ஆய்வுகள் மேற்கொள்ள திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
On April 2, four astronauts strapped into a capsule named Integrity and left Earth’s orbit behind, commencing the Artemis II mission, the first crewed mission after a gap of 54 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பசிபிக் கடலில் நாளை தரையிறங்கும் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள்!

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை

விண்ணில் பாய்ந்தது நாசாவின் Artemis II! 4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்கு பயணம்!
நிலவை நோக்கி மீண்டும் பயணம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
