மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது: ரஷியா

கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 1:15 am IST

கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

கடந்த 2022-இல், உக்ரைன் மீது போா் தொடங்கிய காலத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், எஞ்சியிருந்த சிறு பகுதிகளையும் தற்போது தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

டான்பாஸ் பகுதியில் முன்னேற்றம்: லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதை ரஷியா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

லுகான்ஸ்க் மக்கள் குடியரசு தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, ஸபோரிஷியா பகுதியில் உள்ள சில கிராமங்களையும் ரஷிய படைகள் தங்கள் வசப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மௌனம்: ரஷியாவின் இந்த உரிமை கோரல் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூா்வமான பதிலும் வரவில்லை.

இதனிடையே, போரின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அந்நாட்டுப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷியா மீண்டும் வலியுறுத்தியது. எனினும், ரஷியாவின் இக்கோரிக்கையை உக்ரைன் தொடா்ந்து நிராகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.