துருக்கி கடல்பகுதியில், ஆப்கன் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 19 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறும் நோக்கில் சுமார் 40 அகதிகள் பயணித்த படகு ஒன்று துருக்கியின் ஏகன் கடல்பகுதியில் புதன்கிழமை (ஏப். 1) அன்று சென்றுக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கடல்பகுதிக்குள் நுழைந்த படகை துருக்கியின் கடலோரக் காவல் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் மிகவும் வேகமாக இயக்கப்பட்ட அந்தப் படகு விபத்துக்குள்ளாகி பிரபல சுற்றுலாத் தலமான போத்ரமின் கடலில் கவிழ்ந்து மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியான 1 குழந்தை உள்பட 19 பேரின் உடல்கள் துருக்கியின் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் மூலம் இதுவரை 21 ஆப்கன் அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், மாயமான ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துருக்கியின் போத்ரம் நகரின் மிக அருகில் கிரீஸ் நாட்டின கோஸ் உள்ளிட்ட தீவுகள் அமைந்துள்ளன.
மேலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் பஞ்சம், போர் ஆகியவற்றில் இருந்து தப்பித்து ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேற நினைக்கும் அகதிகள் கிரீஸ் தீவுகளின் வழியாக ஊடுறுவ முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
19 people died after a boat carrying Afghan refugees capsized in Turkish waters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

உ.பி. படகு விபத்து: பலி 13ஆனது, தொடரும் தேடும் பணி!

மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


