ஸ்ரீ்அண்ணாமலையார் அறப்பணிக் குழுவினர் சார்பில் ஏப்ரல் 26 அன்று ஆரணிக்கும், ஆற்காடுக்கும் இடையில் உள்ள கே. கே. தோப்பு யோகலிங்கேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், தண்டுபத்து அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் சித்திரை கொடைவிழா ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) முதல் ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் எனும் திருவூறல் அருள்மிகு கிரிராஜகன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) காலை 9 } 10 மணிக்குள் ரத உற்சவம் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள வல்லிபுரம் ஸ்ரீ அம்புஜவல்லி நாயிகா ஸமேத
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஏப்ரல் 28}ஆம் தேதி வார்ஷிக உற்சவம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 29 முதல் மே 10 வரை பல்வேறு உற்சவங்களுடன் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம் கிராமத்தில் 381}ஆவது ஆண்டு, ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி திருவிழாவில் ஏப்ரல் 28 திவ்யநாமம், டோலோத்ஸவம், ஏப்ரல் 29 ராதா கல்யாணம், ஏப்ரல் 30 மாலை 6 மணிக்கு நரசிம்ம சுவாமி பிராணப் பிரதிஷ்டை, இரவு 7 மணிக்கு ஸ்ரீநிவாஸப்பெருமாள் கருடசேவை, இரவு 10 மணிக்கு பிரகலாத சரித்திரம் நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோவில்பட்டி கதிர் நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஹோமம் நடைபெறுகிறது.
கரூரில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் ஏப்ரல் 30 காலை 7.35 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை, ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவத ஸ்வாமிநாம ஸங்கீர்த்தன மண்டபம் 107-ஆவது ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெயந்தி மகோத்சவம் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30 மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மூர்த்தி பிராணபிரதிஷ்டை வைபவம். மே 2 காலை 10 மணிக்கு ஸ்ரீ சீதாகல்யாண மகோத்சவம்.
ஸ்திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக மே 3 கருடசேவை, மே 5 நாச்சியார் திருக்கோலம், மே 7 திருத்தேர்,
மே 9 தீர்த்தவாரி, மே 10 சப்தாவர்ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விஷேசம்?

ஏப். 29 வரை வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

கும்பாபிஷேகம் முதல் பட்டாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விஷேசம்!
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

