• கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை அருகேயுள்ள இடுகம்பாளையம் அருள்மிகு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 18, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையன்று அதிகாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை, ஆன்மிகச் சொற்பொழிவு, பஜனை, வள்ளிக்கும்மி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
• திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை ஸ்ரீசுந்தர குஜாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா ஏப்ரல் 19 முதல் 30 வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள் : ஏப்ரல் 22 - திருமுலைப்பால், ஏப்ரல் 24 - காலசம்ஹாரம், ஏப்ரல் 29 - திருத்தேர் உற்சவம்.
• சென்னை - 64 , சிட்லபாக்கம், எம். சி. நகர் முதல் பிரதான சாலை, ஸத்குரு ஷீரடி ஸôயிபாபா மற்றும் விபூதி பாபா ஆலய கும்பாபிஷேகம் ஏப்ரல் 20, காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.
• திருவையாறு, ஸ்ரீதர்மசம்வர்த்தனியம்மன் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தில் சைத்ர மகோற்சவம் ஏப்ரல் 20}ஆம் தேதி தொடங்கி, மே 4}ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.
• வேலூர் மாவட்டம், குடியாத்தம், நல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத அருள்மிகு பாலசார்தூலீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 20 }ஆம் தேதி முதல் மே 3 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வுகள்: ஏப்ரல் 27, காலை 10 மணிக்கு திருத்தேர் உற்சவம், மே 1, இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கு.
• தஞ்சாவூர், தெற்கு ராஜவீதியில் உள்ள ஸ்ரீ பீமராஜ கோஸ்வாமிகள் சதன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் சந்நிதி மண்டலபூஜை பூர்த்தி ஏப்ரல் 21- இல் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஹோமங்களுடன் நடைபெறுகிறது.
• ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகில் தக்கோலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 21}இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழாக்கள்: ஏப்ரல் 27 - ரத உற்சவம், ஏப்ரல் 28 - திருக்கல்யாணம், ஏப்ரல் 30 } நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி.
• தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், கீழ்க்கொருக்கை அருள்தரும் புஷ்பவல்லி அம்பிகா உடனாகிய அருள்தரும் பிரம்மபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் முதலாம் ஆண்டு ஸம்வத்ஸ்ராபிஷேகம் ஏப்ரல் 22 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
• மயிலை அருள்மிகு பொற்கொடி அம்பாள் உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்ரல் 23, காலை 6 மணியளவில் நடைபெறுகிறது. அன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறும்.
• மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்ட ராமஸ்வாமி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஏப்ரல் 23}இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழாக்கள்: ஏப்ரல் 25} கருடவாகனம், ஏப்ரல் 27 - அனுமந்த வாகனம், ஏப்ரல் 29} திருத்தேர், மே 2 - பட்டாபிஷேகம்.
• வேலூர் மாவட்டம், மேல்பாடி (வழி) வள்ளிமலை ஆசிரமத்தில் 35-ஆம் ஆண்டு வேல்மாறல் அகண்ட பாராயணம் மே 1 காலை 9 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து மே 2 காலை 10 மணிக்கு முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எந்த கோயிலில் என்ன விஷேசம்?

ஏப். 29 வரை வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

