தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உலகம் பலவிதம் - 01-11-2026

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தால் இன்று பல்வேறு பணிகள் எளிதாகிவிட்டாலும், கதை சொல்லும் கலையை ஏ.ஐ.யால் கையாள முடியவில்லை.

Published On :1 நவம்பர் 2026, 12:24 pm IST

கதை சொல்லிகளுக்கு மவுசு குறையாது

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தால் இன்று பல்வேறு பணிகள் எளிதாகிவிட்டாலும், கதை சொல்லும் கலையை ஏ.ஐ.யால் கையாள முடியவில்லை. இதனால் கதை சொல்லும் திறன் மிக்க நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் 'லிங்க்டு-இன்' தளத்தில் கதை சொல்லிகளுக்கான வேலைவாய்ப்புகள் இருமடங்காகியுள்ளதாக 'வால்ஸ்ட்ரீட் ஜர்னல்'அறிக்கை தெரிவிக்கிறது. கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த வேலைக்கு ரூ.2.6 கோடி வரை சம்பளம் தருகின்றன. செம்மையான எழுத்து வடிவிலான உள்ளடக்கத்தை அனைவரும் உருவாக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் வாய்ப்பளித்துள்ளது. இது மனிதர்களால் எழுதப்படும் உள்ளடக்கங்களை அரிதாக்கிவிட்டது.

Story image

தபேலா வாசிப்பில் குழந்தை

இசையைக் கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் ஆகும். ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்வர்க்ஷி ஹெக்டே என்ற 2 வயது 10 மாதமே ஆன குழந்தையோ... தபேலாவில் (இந்துஸ்தானி இசையில் முக்கிய தாள வாத்தியம்) 12 தாளங்களைச் சொல்லியும் வாசித்தும் மூக்கில் விரல் வைத்து வியக்க வைத்துள்ளது. ஹெக்டேவின் சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது. சமூக வலைதளமான 'எக்ஸ்'பக்கத்தில் குழந்தையின் சாதனை விடியோ வைரலாகி வருகிறது.

Story image

எந்திரன் கால் கழன்றது

சீனாவின் 'யூனிட்ரி ரோபோட்டிக்ஸ்' நிறுவனம் ஒரு புதிய மனித உருவ ரோபோவை (எச்2-எக்ஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. குங்ஃபூ செயல்விளக்கத்தில் ரோபோ பக்கவாட்டில் திரும்ப முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தது. சம்பவத்தில் ரோபோவின் காலின் ஒரு பகுதி கழன்றுவிட்டது. பாதுகாப்பு, அவசரகால மீட்புப் பணிகளுக்காக இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

Story image

அமெரிக்காவில் தீபாவளி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 'வால்ட் டிஸ்னி வோல்டு' விடுதியில் தீபாவளி விழா விமரிசையாக நடைபெற்றது. மிக்கி மவுஸ் ஷெர்வானி அணிந்தும், மின்னி மவுஸ் சேலை உடுத்தியும் அரங்கில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

'மேஜிக் கிங்டமில்' நடைபெற்ற பிரமாண்ட தீபாவளி அணிவகுப்பில் இந்திய பாரம்பரிய உடைகளில் 500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். நான்கு நாள்கள் நடைபெற்ற விழாவில், நான்கு கண்டங்களைச் சேர்ந்த 25 நடனப் பள்ளிகளின் கலைஞர்கள் பங்கேற்றனர்.

Story image

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இந்தியர்

தினக்கூலி தொழிலாளிகளின் மகன் டாக்டர் மனோஜ் பி.ராயரோத். இவர் 2025-ஆம் ஆண்டுக்கான 'எஸ்சிஐ ரேங் குளோபல் ரிஜிஸ்ட்ரி' பட்டியலில் உலகின் சிறந்த 5 சதவீத விஞ்ஞானிகளில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.

2026-27-ஆம் ஆண்டின் இந்திய ஆர்டிக் ஆய்வுப் பயணத்தின்போது பனிப் பாறைகள் உருகுவதால் கடலில் மாசுக்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆய்வு செய்ய நீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளார். இவரது ஆய்வுகள் 2900 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 25 என்ற எச் குறியீட்டையும் இவர் பெற்றுள்ளார்.

Story image

வெடித்துச் சிதறிய மின்சார ஸ்கூட்டர்

சீனாவில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியது. விபத்தால் வானுயரத்துக்குத் தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு எரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சம்பவத்தின் போது யாரும் இல்லை என்பது ஆறுதல். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

Story image

மசாலாப் பொடியில் ஓவியம்

கர்நாடகத்தைச் சேர்ந்த கலைஞர் அமர் கலே. மஞ்சள், மிளகாய்ப் பொடிகளைப் பயன்படுத்தி 1892.5 சதுர அடியில் ஓவியம் வரைந்து, கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். கர்நாடக வரைபடத்தின் மையத்தில் ஹம்பியின் புகழ்பெற்ற கல்தேர் உள்ளது போன்று இந்த ஓவியம் அமைந்துள்ளது. 6 கிலோ மஞ்சள் தூள், 5 கிலோ மிளகாய்த் தூள் பயன்படுத்தி 10 மணி நேரத்துக்கு மேல் வரைந்துள்ளார் அமர் கலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.