* வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசம் 1987-இல் உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவையாக 'கிரேட் ஹார்ன்பில்' என்ற மலை இருவாட்சி உள்ளது.
* 'லூனி ஆறு' என்பதே தார் பாலைவனத்தின் மிகப் பெரிய ஆற்று அமைப்பாகும். ஏறக்குறைய 495 கி.மீ. தொலைவுக்குப் பரவியுள்ள இந்த ஆறு, ராஜஸ்தானின் வறண்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாகத் திகழ்கிறது.
* நாட்டில் மேம்பாலங்களின் நகரமாக, சென்னையில் அறுபதுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, 19 புதிய மேம்பாலங்கள் கட்டுமானத்தில் உள்ளன.
* உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் நகரத்தை 'நாட்டின் மணக்கும் நகரம்' என்பர். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் பண்டைய காலம் முதலே நறுமண எண்ணெய் தயாரிப்பில் புகழ் பெற்றது. பிரான்ஸில் உள்ள கிராஸ் நகரம் உலக வாசனை திரவியத் தலைநகரமாகத் திகழ்வதைப் போல், கன்னோஜும் சிறப்புடையது.
* உருளைக்கிழங்கை ஆராய 1949-ஆம் ஆண்டில் பாடலிபுத்திரத்தில் மத்திய ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. இதற்கு முன்னர் 1935-இல் உருளைக்கிழங்கு வளர்ப்பு நிலையம் சிம்லாவில் தொடங்கப்பட்டது.
* குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலை 'ஒற்றுமைச் சிலை' என்றும், ஹைதராபாத்தில் உள்ள ராமானுஜர் சிலை 'சமத்துவச் சிலை' என்றும், மகாராஷ்டிரத்துக்கு உள்பட்ட லத்தூரில் உள்ள அம்பேத்கர் சிலை 'அறிவுச் சிலை' என்றும், பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா சிலை 'வளமையின் சிலை' என்றும் பெயரிடப்பட்டுள்ளன.
* ஜெர்மனியில் இயற்கையாக உருவான பாலைவனங்கள் இல்லை. ஆனால், ராணுவப் பயிற்சியின்போது இயற்கையான மணல் நிலப்பரப்பில் இருந்த தாவரங்கள் அழிந்து உருவான தரிசான பாலைவனம் போன்று 'லீபெரோசா வூஸ்டே' என்ற பகுதி உள்ளது.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வழிகாட்டி உதவுங்கள்

இது தெரியுமா? கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவிலேயே இருப்பது ஏன்?
நீதிக் கதைகள்! விதூஷகனின் நுண்ணறிவு!

வழிகாட்டி உதவுங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

