விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தெரிஞ்சுக்கோங்கோ...

தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது. தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:00 am IST

தீர்மானத்துக்குப் பின்னர் தடுமாற்றம் கூடாது.

தடுமாற்றம் இருப்பின் தீர்மானித்தல் கூடாது.

-எம்.ரவீந்திரன், திருமருகல்.

எண்ணங்களின் எழுச்சி வாழ்க்கை தரும் மகிழ்ச்சி.

மென்மை போக்கே மேன்மை காக்கும்.

தடம் பார்த்து நடப்பவர் மனிதர். வெற்றி வடம் பிடித்து நடப்பவர் மனிதர்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

நல்ல செயல்கள் செய்ய பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். -த.பாலசுப்பிரமணியன், கோவை-4.

சந்தோஷமாக இருக்கும்போது இசை பிடிக்கிறது. துக்கமாக இருக்கும்போது பாடலின் வரிகள் புரிகிறது.

பிரச்னைகளை சவால்களாக ஏற்றால் துணிவு தானே வரும். -கே.அனந்தநாராயணன், மருங்கூர்.

துணிவு உங்களை உழைப்பால் உயர வைக்கும். பணிவு உங்களைப் பிறர் மனதில் உயர வைக்கும். -ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.

எதிரியின் பலம் உன் பலவீனத்தில் இருக்கிறது.

தோல்வி என்பது பெருங்காயம்போல தனியாகச் சாப்பிட்டால் கசக்கும். வெற்றி என்றும் சாம்பாரில் கரைந்துவிட்டால் மணக்கும். -நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

வெற்றி பெறும்போது அவன் என் நண்பன் எனப் பெருமை கொள். தோல்வி அடையும்போது நான் உன் நண்பன் என அவன் அருகில் நில்.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.