விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமையல் டிப்ஸ்...

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

News image

கொத்துமல்லி

Updated On :29 மார்ச் 2026, 4:01 am IST

கீரை, முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கு போன்றவற்றில் உள்ள சத்து வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னரே அவற்றை வேக வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கினால் கறி மிக ருசியாக இருக்கும்.

கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து போளி செய்தால் அதன் சுவையே அலாதி தான்.

ஈரமான காய்கறிகளை ஒரு பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை சீக்கிரமாக அழுகிப்போகாது.

கொத்துமல்லித்தழையை ரசத்தில் போட்டு விட்டு அதன் தண்டை வீணாக்காமல் காய வைத்து, ரசப்பொடியில் சேர்த்து அரைக்கவும். வாசனையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.