தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.
புளித்த மோர் இருந்தால், அதில் புழுங்கல் அரிசியும், உளுந்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமில்லை. தோசை சுவை மிகுந்து இருக்கும்.
வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி உப்பு, மிளகு, சீரகப்பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம்.
பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும் போது முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்
நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.
கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்து விடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் இரண்டு கரண்டி மோரை ஊற்றி, அதில் அந்தக் காய்கறித்துண்டுகளைப் போட்டால் காய்கள் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.
-ஆர். கீதா, ஆலுவா.
முந்திரி, பாதாம், கசகசா இவற்றை நீரில் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.
சாதம் குழைந்து விட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கரண்டி காம்பால் கிளற பொல பொல என்றாகும்.
சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்விட்டு பின் சர்க்கரை, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது .
இட்லிப் பொடி செய்யும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
-நாகஜோதி கிருஷ்ணா, சென்னை-5.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாசிப்பயறு தேங்காய்ப் பால் மலாய்
சமையல் டிப்ஸ்!
தேங்காய் லட்டு

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
