தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஹா...ஹா...

கால் சிலிண்டர் தட்டுப்பாடு வந்தது நல்லதா போச்சா, என்ன சொல்றே?

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 4:10 am IST

'கால் சிலிண்டர் தட்டுப்பாடு வந்தது நல்லதா போச்சா, என்ன சொல்றே?'

'என் மனைவி இப்போதுதான் என் அம்மாவுக்கு மரியாதை கொடுத்து அடுப்பில் சமைக்கச் சொல்றாளே!'

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.



'இன்னிக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே கிளம்பிட்டீங்களே, ஏன்?'

'வீட்டில் விறகு அடுப்பில்தான் சமையல்... அதான்!'



' சர்வர், தோசையை வெந்ததும் வேகாததுமா கொண்டு வந்திருக்கீயே?'

'கிச்சன்ல கியால் தீர்ந்திருச்சி, சார்!'



'ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடறீங்களே... நீங்க வீட்டுக்குப் போகும்போது தள்ளிட்டுதான் போவீங்க?'

'அப்படிப் போனால்தான் வீட்டில் பெட்ரோலுக்கான பாக்கெட் மணி கிடைக்கும்!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'என்னங்க, நம்ப பையனுக்கு பொறுப்பு வந்திருக்கு...'

'எப்படிச் சொல்றே?'

'காத்தாலே மூணு மணிக்கு எழுந்து வண்டிக்கு பெட்ரோல் போடப் போறான்!'

-ச.புவனேஸ்வரன், பாலவாக்கம்.



'காஸ் தட்டுப்பாடு வந்தப்புறம் அந்த

விறகுக் கடைக்காரரைப் பிடிக்க முடியலை...'

'ஏன்... என்னாச்சு அவருக்கு?'

'விறகு, மரத் தூள், கரின்னு எல்லாத்தையும் நல்ல விலைக்கு வித்துட்டாரு!'



'பைக்கில் மஞ்சள் டீசர்டில் போறாரே... அவர்தான் எங்க ஏரியாவுக்கு 'ஹீரோ' இப்போ!'

'அப்படியா... எந்தப் படத்துல நடிக்கிறாரு?'

'அதெல்லாம் இல்லை... வீட்டுக்கு வீடு சிலிண்டர் சப்ளை பண்றாரு!'

-சன்ஷி சம்ரு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.