கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு...

அரிசியைச் சமைத்துத் தயாரிக்கும் கூழ், கெட்டியான கஞ்சி, சாதம் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியான உணவா?

கெட்டியான கஞ்சி

Published On :1 நவம்பர் 2026, 4:03 am IST

அரிசியைச் சமைத்துத் தயாரிக்கும் கூழ், கெட்டியான கஞ்சி, சாதம் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியான உணவா? ஆயுர்வேதத்தில் இவற்றுக்கு என்ன வித்தியாசம் கூறப்பட்டுள்ளது? உடல் நலம் குன்றியவர்கள், காய்ச்சல் அல்லது பலவீனம் உள்ளவர்கள், சிகிச்சைக்குப் பிறகு குணமாகிவருபவர்கள் எந்தவகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

-சுபத்ரா, நங்கநல்லூர்.

ஆயுர்வேதம் உணவின், தானியத்தின் தன்மையை மட்டும் பார்க்காமல், அது எவ்வளவு காலம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உடலில் அதிகப்படியான சுரப்பு அல்லது அடைப்புத் தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு வருடம் வரை சேமித்துவைக்கப்பட்ட தானியங்கள் ஒப்பீட்டளவில் எளிதாகச் செரிமானமாகும் என்று குறிப்பிடப்படுகிறது. அதேபோல், குறுகிய காலத்தில் அறுவடைசெய்யப்படும் சில தானியங்கள் லேசானவை என்றும், முறையாக வறுத்து, தோல் நீக்கப்பட்ட சில தானிய வகை

கள் லேசானவை என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து ஒரு முக்கியமான உணவியல் கருத்தை நாம் புரிந்து கொள்ளலாம். உணவின்பெயர் மட்டும் முக்கியமல்ல; அதன் வயது, பதப்படுத்தும் முறை, சமைக்கும் முறை ஆகியவையும் முக்கியம்.

ஒரே அரிசியை அதிக தண்ணீரில் சமைத்தால் கஞ்சி போன்ற திரவ உணவு கிடைக்கிறது. அந்த அரிசியை, குறைந்த தண்ணீரில் சமைத்தால், கெட்டியான உணவு கிடைக்கிறது.

ஆயுர்வேதம் இதனை மிகவும் நுட்பமாகப் பிரிக்கிறது.

மண்டம் - பேயம் - விலேபி - ஓதனம்.

அதாவது,

மண்டம் -அரிசிக் கஞ்சியின் தெளிவான நீர்ப்பகுதி.

பேயம் -அதிக நீருடன் தயாரிக்கப்படும் அரிசிக் கஞ்சி.

விலேபி-குறைந்த நீர், அதிக அரிசியுடன் தயாரிக்கப்படும் அரிசிக்கஞ்சி (கெட்டியானது).

ஓதனம் - சாதம்.

இவற்றில் மண்டம் மிகவும் லேசானது. அதன்பின் பேயம், அதன்பின் விலேபி, இறுதியில் ஓதனம் என்று அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் விளக்கம் கூறுகிறது.

இதன் மூலம், நோயிலிருந்து மீண்டுவரும் ஒருவருக்கு உடனடியாக வழக்கமான கெட்டியான சாதத்தை அதிகமாகக் கொடுப்பதை விட, அவருடைய செரிமான சக்திக்கேற்ப படிப் படியாக உணவை மாற்றுவது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேத விளக்கப்படி மண்டம் - உடலில் வாயுவை இயல்பாக வெளியேற்ற உதவுகிறது. தாகத்தைத் தணிக்கிறது. சோர்வைக் குறைக்க உதவுகிறது. உடலில் எஞ்சியுள்ள தோஷங்களை நீக்க உதவுகிறது. செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. தாதுக்களின் சமநிலையைப் பராமரிக்கிறது. உடலின் நுண்ணிய வழிகளை மென்மையாக்குகிறது. வியர்வை ஏற்பட உதவுகிறது.

பேயம் - பசியையும் தாகத்தையும் சமாளிக்கும் கஞ்சி. பேயம் என்பது மண்டத்தைவிட சற்று கெட்டியான அரிசிக் கஞ்சி. இதில் தண்ணீரைவிட அரிசியின் அளவு அதிகமாக இருக்கும். இது பசியைத் தணிக்கிறது. தாகத்தைக் குறைக்கிறது. வயிற்றுத் தொந்தரவுகளில் பயன்படக்கூடியது. காய்ச்சல் உள்ள நிலையில் உகந்த உணவாகக் கருதப்படுகிறது. மலத்தை இயல்பாக வெளியேற்ற உதவுகிறது. உடலுக்கு ஏற்ற பத்திய உணவு. உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.

விலேபி - கெட்டியான அரிசிக்கஞ்சி. மண்டம் மற்றும் பேயமைவிட விலேபி கெட்டியானது. இதில் தண்ணீர் குறைவாகவும், அரிசி அதிகமாகவும் இருக்கும். இது மலத்தைப் பிடித்துக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. உடலுக்கு இதமானது. தாகத்தைத் தணிக்கிறது. செரிமான சக்தியைத் தூண்டுகிறது. காயம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள், உடல் பலவீனம் கொண்டவர்களுக்கு விலேபி நல்லது.

நாம் வழக்கமாக உண்ணும் சமைத்த சாதம் ஓதனம் என்று அழைக்கப்படுகிறது. மண்டம், பேயம், விலேபி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஓதனம் அதிக கனமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அதில் தண்ணீரின் அளவு குறைந்து, அரிசியின் அளவு அதிகமாக இருப்பதே.

எனவே, செரிமான சக்தி குறைந்திருக்கும் நேரத்தில் மெல்லிய கஞ்சி முதல் கெட்டியான உணவு வரை படிப்படியாகச் செல்லவேண்டும் என்ற கருத்தை ஆயுர்வேத ம் வலியுறுத்துகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.