தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஓவிய கிராமம்

கற்பனைத்திறனைப் பயன்படுத்தி தூரிகை, நிறங்கள் கொண்டு காட்சிகளை, கருத்துகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னத கலை வடிவம் ஓவியம்.

News image
Updated On :3 மே 2026, 4:20 am IST

கற்பனைத்திறனைப் பயன்படுத்தி தூரிகை, நிறங்கள் கொண்டு காட்சிகளை, கருத்துகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னத கலை வடிவம் ஓவியம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால், ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீடும் கலைக்கூடம். ஒவ்வொரு கிராமவாசியும் தனது கலைப்படைப்புக்காக அகில இந்திய அல்லது மாநில அளவில் விருது பெற்றுள்னார். ஓவியக் கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அந்தக் கிராமம், ரகுராஜ்பூர்.

ஒடிஸா மாநிலத்தில், பூரியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் கோனார்க் கோயிலுக்குப் போகும் வழியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் 125 குடும்பங்கள் வசிக்கின்றன. தலைமுறை

தலைமுறையாக சிறியவர், பெரியவர், ஆண் -பெண் வித்தியாசமின்றி அனைவரும் வண்ண ஓவியங்களை முழு நேர வேலையாக வரைகிறார்கள். தங்கள் உருவாக்கிய கலைப்படைப்புகளை நியாயமான விலைக்கு விற்கிறார்கள்.

ரகுராஜ்பூரில் குழந்தைகள் ஐந்து வயதிலேயே ஓவியம் வரையக் கற்கத் தொடங்குகிறார்கள். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தவழ்ந்து செல்லும் ஓவியக் கலை, விரல்கள் தாங்கும் தூரிகை மூலம் நர்த்தனம் ஆடுகின்றன. சிறார்கள் கற்றுக்கொள்வது வெறும் ஓவியக்கலை நுட்பம் மட்டுமல்ல, தங்கள் பாரம்பரியத்தையும்தான்.

ஒரு காலத்தில் ஜகந்நாதர் கோயில்களின் சடங்குகளுக்காக உருவாக்கப்பட்ட 'பட்டசித்ரா' முறை ஒவ்வொரு வீட்டிலும் ஆன்மாவாக வாழ்கிறது.

பெரியவர்கள் சிக்கலான புராணக் காட்சிகளை சாதாரணமாக துணிகளில், தாள்களில், பொருள்களில், சுவர்களில் வரைகிறார்கள். பெண்கள் கனிமங்கள், கற்கள், தாவரங்கள் போன்ற இயற்கை மூலகங்களிலிருந்து வண்ணங்களைத் தயாரிக்கிறார்கள். வரையவும் செய்கிறார்கள். சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்களின் உழைப்பை உற்று கவனித்து கலைநுட்பங்களை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

ரகுராஜ்பூரில் வாழும் பல கலைஞர்கள் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், வருமானத்தைப் பெருக்க, வசதியாக வாழ கிராமத்தை விட்டுப் புலம் பெயரவில்லை. கலை கிராமத்தின் வேர்களாகிப் போயிருப்பதால், புலம் பெயர்தல் குறித்து அவர்கள் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. விருதுகள், பொருளாதாரக் கனவுகள் கலைஞர்களின் இயல்பை மாற்றவில்லை. அவர்கள் மூதாதையர்கள் கலைக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டது போல, இன்றைக்கும் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து, இயற்கை ஒளியில் ஓவியம் தீட்டுகின்றனர்.

வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கும் சுவரோவியங்கள் இதிகாசக் கதைகளை விவரிக்கின்றன. முடிக்கப்பட்ட கலைப் படைப்புகள் முற்றங்களில் வெயிலில் உலர்கின்றன. ஓவியங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறமும் இயற்கையானது. ஒவ்வொரு கலைப் படைப்பும் கையால் உருவாக்கப்பட்டவை.

சுருக்கமாகச் சொன்னால் அந்தக் கிராமம் கலையை உயிருக்கு உயிராக நேசிக்கிறது, மூச்சாக சுவாசிக்கிறது. ஒவ்வொரு தூரிகை வீச்சிலும் ஓவியம் உயிர் பெற்று, அந்தக் கிராமத்துக்கு புகழைச் சேர்த்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.