முனைவர் ஜி.குமார்
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம். அறையில் ஒளி இல்லை. மின் விசிறி சுழன்று கொண்டிருக்கிறது. இருப்பினும் ஒரு கொசு வந்து கடிக்கிறது. அது எப்படி ? உண்மையில் அது ஒரு 'விஞ்ஞானக் கடி' என்றால் நம்புவீர்களா?
உண்மையில் கொசுக்களிடம் ஐந்து அபார சக்திகள் உள்ளன. கொசு ஒரு சிறிய உயிர் மட்டுமல்ல; அது ஓர் உயிரியல் டிரோன். அதனிடம் ஐந்து உணரிகள் 'சென்சார்கள்' இருக்கின்றன. அவைகளைப் பயன்படுத்தி நம்மை நாடி வருகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பெண் கொசுக்களே கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஏனெனில், அவைகளுக்கு முட்டையிட புரோட்டின்கள் அவசியம்.
உறங்கும்போது நமது மூச்சு வெளிவருகிறது. அப்போது கார்பன் டை ஆக்சைடு வெளி வருகிறது. இதைக் கொசுக்கள் 50 மீட்டர் தூரத்திலிருந்து உணர்கிறது. அதன் மேல் தோலில் உள்ள ஆண்டெனா ( உணர்வுக் கொம்பு) போன்ற உறுப்பில் ஆயிரக்கணக்கான வேதி உணர்ப்பொறிகள் உள்ளன. அவை கரியமில வாயுவின் ஒரு மூலக்கூறு மோதியதுமே கொசுவை எச்சரிக்கை செய்கின்றன.
கொசு நமது அருகில் வந்ததும் உடல் வெப்பத்தையும் அந்த ஆண்டெனா காட்டிக் கொடுத்துவிடுகிறது. 0.05 டிகிரி சென்டிகிரேட் வரை உணரும் ஆற்றல் உள்ள வெப்ப உணரிகள் அவைகளிடம் உள்ளனவாம். அதாவது வெப்பத்தையே படமாக்கும் நுட்பம் கொண்டவை கொசுக்கள். கொசுக்களின் உடல் முகப்பில் பலவித நுண்ணிய லென்ஸ்கள் (கண்ணாடி வில்லைகள்) உள்ளன. அவை வெவ்வேறு நிறங்களை உணர்வதுடன் நகர்வதையும் காட்டிக் கொடுக்கின்றன. ஐந்து முதல் பத்து மீட்டர்கள் வரை இந்த ஆற்றல் செயல்படுகிறது.
ஈரப் பசையையும் வியர்வையையும் கொசுக்கள் இந்த உணரிகள் மூலமே புரிந்துகொள்கின்றன. வெயிலில் வியர்வை வடியும்போது விளையும் ஈரப் பசை அம்மோனியா, லாக்சிக் ஆசிட் போன்ற வெவ்வேறு வேதிப் பொருள்களை உமிழ்கின்றன. கொசுக்களிடம் உள்ள உணரிகள் இவற்றை கொசுக்களுக்குத் தெரிவிக்கின்றன.
கொசுக்களை ஒரு சில ரத்தப் பிரிவுகள் அதிகம் ஈர்க்கும் என்பது அதிக வியப்பு தரும் செய்தியாகும். பொதுவாக, 'ஓ' பிரிவு வகையை அதிகப் பிரியத்துடன் கொசுக்கள் உறிஞ்சும். ' ஏ'
பிரிவு வகை குறைந்த அளவே அவைகளை ஈர்க்கும். உடலிலிருந்து வெளியேறும் கதிர்கள் தரும் சமிக்ஞைகளைக் கொண்டே கொசுக்களிடம் உள்ள உணரிகள் நாம் எந்த ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்துத் தரும் என்று கொசுக்கள் பற்றிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அடுத்த முறை நம்மைக் கொசுக்கள் கடிக்கும்போது அவை இந்த ஐந்து அறிவியல் சக்திகளைக் கொண்டே நம்மைத் தேடி வந்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56
குழந்தைகள் வடிவமைப்பு

'பஞ்சலட்சணம்' படிப்போம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
