'அன்பே வா' படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவருக்கும் டீ, வடை கொடுப்பது வழக்கம்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். அங்கிருந்த ஏவி.எம். சரவணனிடம், 'சரவணன்... நீங்க வடையை உங்க ரூமில் வச்சி சாப்பிடுங்க...' என்றார்.
'என்ன சார்... என்னாச்சி?' என்றார்.
பின்னர் இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்:
'ஒரு பொருளை எல்லோருக்கும் கொடுத்துச் சாப்பிடணும். இல்லையென்றால், நீங்க தனியாக வைத்துச் சாப்பிட வேண்டும்...' என்றார் எம்.ஜி.ஆர்.
'இல்லை சார்... எல்லோருக்கும் கொடுத்தாச்சே..!'
'அங்கே ஒரு லைட்மேன் அமர்ந்து வேலை பார்க்கிறார். அவருக்கு நீங்கள் எதுவும் கொடுக்கவில்லை. எல்லோருக்கும் கொடுத்தாச்சா என்று பார்த்துவிட்டே சாப்பிடணும்...'
இவ்வாறு எல்லோருக்கும் கொடுத்துவிட்டே சாப்பிடணும் என்று எம்.ஜி.ஆர். சொல்வது வழக்கம். அவரது வார்த்தைகள் கடைசிவரை தனக்கு எதிரொலித்ததாக சரவணன் கூறியிருக்கிறார்.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
ஜெயசந்திரன்
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கொச்சின் அரசக் குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவரே பாடகர் ஜெயசந்திரன். நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டாலும், சில சமஸ்தானங்கள் மன்னர் பட்டத்தைப் பயன்படுத்தி வந்தன.
அந்த வகையில் கொச்சியின் அரசக் குடும்பத்தின் வம்சாவளி ரவிவர்மா கொச்சனியான் தம்புரானுக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் ஜெயசந்திரன். அரசக் குடும்பத்தில் பிறந்தாலும் இவர் கடைசி வரையில் எளிமையான வாழ்க்கையை மட்டுமே விரும்பினார். இவருக்கு இசை ஆர்வம் ஏற்படக் காரணமே அவரது தந்தைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிரி... சிரி... - 03-05-2026

தீப்பிடித்து எரிந்த மலைக்காடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்வு

கமலாலயக் குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
