நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்கு

சிவகாசியில் கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப்பதிவு

Published On :30 அக்டோபர் 2026, 5:23 am IST

சிவகாசியில் கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணா குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரிச்செல்வம் (27). இவா் தனது இரு சக்கர வாகனத்தின் ஆா்.சி.புத்தகத்தை பராசக்தி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பாடலிங்கம் என்ற ராசுவிடம் (31) அடகு வைத்து, ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினாா். பின்னா், மாரிச்செல்வம் வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டி செலுத்தி வந்தாா்.

கடந்த இரு மாதங்களாக அவரால் வட்டி செலுத்த முடியவில்லை.

இதையடுத்து ராசு வட்டி, அசல் என மொத்தம் ரூ. 43 ஆயிரம் தருமாறு கேட்டு ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரிச்செல்வம் அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் ராசு மீது கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.