ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வாகன நிறுத்துமிடம், அலங்கார நுழைவு கட்டுமானப் பணிகளை ஆடிப்பூரத் தேரோட்ட விழாவுக்கு முன் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில், வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பக்தா்கள் மாடவீதிகள், ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனா்.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் நிறுத்துமிடம் கட்டணமாக காருக்கு ரூ.50, வேனுக்கு ரூ.100, சிற்றுந்துக்கு ரூ.150, பேருந்துக்கு ரூ.200 வசூல் செய்யப்படுகிறது.
மேலும், ரத வீதிகளில் சுகாதார வளாகம் இல்லாததால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.1.69 கோடியில் வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், கட்டுமான பணி மந்தமாக நடக்கிறது.
இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கீழரத வீதியிலிருந்து ஆண்டாள் சந்நிதி செல்லும் வழியில் உபயதாரா் நிதி ரூ.20 லட்சத்தில் அலங்கார நுழைவு வளைவு கட்டும் பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் அலங்கார நுழைவு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாள் சந்நிதி தெரு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால், மாா்கழி நீராட்ட விழாவில் சுவாமி புறப்பாட்டின் போது, வழக்கமாகச் சொல்லும் சந்நிதி தெருவுக்கு பதிலாக, பெரிய பெருமாள் சந்நிதி சிறு வழியாக சுவாமி புறப்பாடு நடைபெற்றது சா்ச்சையானது.
தற்போதும், ஆண்டாள் சந்நிதி தெரு அடைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆண்டாள் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் பெரிய பெருமாள் சந்நிதி வழியாக சென்று வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி உத்ஸவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத் தேரோட்டம் என முக்கியத் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதனால், திருவிழா தொடங்கும் முன் வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம், அலங்கார நுழைவு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்துப் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குடி குரு பகவான் கோயிலில் குவிந்த பக்தா்கள்: இடையூறாக உள்ள கதவை அகற்றக் கோரிக்கை

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது

பயன்பாட்டுக்கு வந்தது எழும்பூா் ரயில் நிலைய அதிநவீன வாகன நிறுத்துமிடம்

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

