பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கல்லூரி மாணவியை தாக்கியவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:12 am IST

விருதுநகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கிய இலங்கைத் தமிழா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே உள்ள குல்லூா் சந்தை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் யசிந்தன் (25). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.

அதன் பிறகு, யசிந்தனுக்கு தவறான பழக்கங்கள் இருப்பதை அறிந்த அந்த மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தினாா். ஆனால், யசிந்தன் தன்னிடம் மீண்டும் பேசிப் பழகுமாறு மாணவியை வற்புறுத்தினாா்.

இதற்கு மாணவி தொடா்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த யசிந்தன், சனிகிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரை இழுத்து வந்து வாருகாலில் தள்ளிவிட்டு, கட்டையால் தாக்கினாா். அருகிலிருந்தவா்கள் வந்து மாணவியை மீட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யசிந்தனை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.