கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, (தவெக) சட்டப்பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை தவெக சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக்கிடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்கள்.

Updated On :24 மே 2026, 2:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, (தவெக) சட்டப்பேரவை உறுப்பினரிடம் சனிக்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அலுவலா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆலோசனை நடத்தினாா். அப்போது மடவாா்வளாகம் பிரமுகா் மாரியப்பன், திமுக தொகுதி செயலா் பிரபாகரமூா்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மடவாா் வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகிறோம். இந்த நிலையில், நாச்சியாா்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக அகற்றப்பட்ட நெகிழி எரியூட்டும் மையம், பழைய ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகக் கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வருகிறது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்கப்பட்டால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.