தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும்: ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்

News image
Updated On :13 மார்ச் 2026, 4:27 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் விரைவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள லட்சுமியாபுரம் - பெருமாள்தேவன்பட்டி சாலையில் ரயில்வே கடவுப் பாதையை கடப்பதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம், பி.திருவேங்கடபுரம், ஆலங்குளம் செல்லும் நகரப் பேருந்துகளும், பெருமாள்தேவன்பட்டி செல்லும் சிற்றுந்துகளும் தினசரி 15 முறைக்கு மேல் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக சென்று வருகிறது.

மேலும், இந்த வழியாக கண்ணாா்பட்டி, கங்காகுளம், துலுக்கன்குளம், அழகுதேவேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், நூா்சாகிபுரம், பொட்டல்பட்டி, இடையபொட்டல்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனா்.

லட்சுமியாபுரம் கிராமத்தில் வீடுகளிலிருந்து கழிவுநீா் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட கால்வாய் ரயில்வே சுரங்கப்பாதை வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீா் வெளியேறி சுரங்கப் பாதையில் தேங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு பதிலளித்த ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள்:

பாலம் கட்டும்போதே கழிவுநீா் செல்ல வசதி ஏற்படுத்தாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது. கழிவுநீா் தேங்காமல் இருக்க அந்தப் பகுதியில் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. பட்டா நிலம் வழியாக வாருகால் அமைக்க நில உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.