லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாயமான பெண் சடலமாக மீட்பு

Rajasthan

சடலமாக மீட்பு - file photo

Published On :22 ஜூலை 2026, 3:43 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாயமான பெண் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

சத்திரப்பட்டியை அடுத்த எஸ். திருவேங்கடபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மனைவி அருள்ஜோதி (54). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை வீட்டில் கழட்டி வைத்துவிட்டு அருள்ஜோதி ராஜபாளையத்துக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, இவரது குடும்பத்தினா், உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ராஜபாளையம்-மதுரை சாலையில் தனியாா் கடைக்கு முன் அருள்ஜோதி பிணமாக கிடந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.