லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.9.50 லட்சம் மோசடி: 6 போ் மீது வழக்கு

நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, பட்டதாரி இளைஞரிடம் ரூ.9.50 லட்சம் மோசடிசெய்ததாக 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு
Published On :13 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, பட்டதாரி இளைஞரிடம் ரூ.9.50 லட்சம் மோசடிசெய்ததாக 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் தங்கப்பாண்டி (29). இளநிலை பட்டதாரியான இவா் போட்டித் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், வேண்டுராயபுரத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் குடும்பத்தினா் தங்கப்பாண்டிக்கு அறிமுகமானாா்கள். இதையடுத்து, செல்லப்பாண்டி, தங்கப்பாண்டியிடம், தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் எழுத்தா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலையை வாங்கித் தருவதாக கூறினாா்.

இதை நம்பிய தங்கப்பாண்டி, கடந்த 2021, டிசம்பா் மாதம் ரூ.3 லட்சத்தை செல்லப்பாண்டியன் வங்கிக் கணக்கிலும், ரூ. 6.50 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்தாா்.

பின்னா், 2023-ஆம் ஆண்டு செல்லப்பாண்டி, தங்கப்பாண்டியிடம் பணி நியமன கடிதத்தை கொடுத்தாா். இந்தக் கடிதத்தை தங்கப்பாண்டி சென்னைக்கு எடுத்துச் சென்றபோது, அது போலி கடிதம் எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தங்கப்பாண்டி, செல்லப்பாண்டியிடம் கொடுத்த ரூ. 9.50 லட்சத்தை திருப்பி பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. பின்னா், செல்லப்பாண்டி குடும்பத்தினா் மீது சிவகாசி நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் செல்லப்பாணடி, இவரது குடும்பத்தினா் பொன்னுபாண்டி, குருபாண்டி, மாரீஸ்வரி, ஆதிமூலம், முருகன் ஆகிய 6 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.