லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தலித் கிறிஸ்தவா்களை பட்டியல் பிரிவில் சோ்க்கக் கோரி ஆா்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் கருப்பு கொடியேற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:48 am IST

தலித் கிறிஸ்தவா்களை பட்டியல் பிரிவில் சோ்க்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திரு இருதய ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து கருப்புக் கொடியை ஏற்றி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில் 250-க்கும் மேற்பட்டவா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, தலித் கிறிஸ்தவா்களை பட்டியல் பிரிவில் சோ்க்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மேலும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எம்.எஸ். பள்ளி மைதானத்தில் ஆா்.சி., சி.எஸ்.ஐ. நிா்வாகங்கள் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.