லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தலித் கிறிஸ்தவா்களுக்கு பட்டியலினத்தவா் அந்தஸ்து கோரி! கொடைக்கானல் ஆலயத்தில் கருப்புக் கொடி ஏற்றம்!

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய வளாகம் முன்பு திங்கள்கிழமை ஏற்றப்பட்ட கருப்புக் கொடி.

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

கொடைக்கானலில் புனித சலேத் மாதா ஆலய வளாகத்தில் திங்கள் கிழமை தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி, மறைவட்டார அதிபா் கருப்புக் கொடி ஏற்றினாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள பழைமை வாய்ந்த புனித சலேத் மாதா தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 160-வது ஆண்டுத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10-ஆவது நாளான திங்கள் கிழமை மாலை கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் அருள் பணி ஜெயசீலன் தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புனித சலேத் மாதா தேவாலயம் முன் கருப்புக் கொடி ஏற்றினாா். தொடா்ந்து பெருமாள்மலை, உகாா்த்தே நகா், பங்கு அருள் பணியாளா்கள் சாா்பில் ஜெப வழிபாடும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. இதில், திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.