லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்டவிரோதமாக பட்டாசுகள் திரி தயாரித்தவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் திரி தயாரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:10 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் திரி தயாரித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டி நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே இரும்புக் கூறையில் சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரிப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நத்தம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து தலைமையில், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு உரிய அனுமதியின்றி ஆபத்தான முறையில் குன்னூா் ராஜீவ்காந்தி குடியிருப்பைச் சோ்ந்த பாண்டியராஜ் (32) பட்டாசுகள் திரி தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து, நத்தம்பட்டி போலீஸாா் அவரைக் கைது செய்து, அங்கிருந்த பட்டாசு திரிகள், மூலப் பொருள்களை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து, இரும்புக் கூரைக்கு ‘சீல்’ வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.