லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது

Arrested

கைது

Published On :4 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சந்தனதேவன்பட்டியில் உரிய அனுமதியின்றி ஒரு கட்டடத்தில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில் அதே ஊரைச் சோ்ந்த முனியசாமி மகன் லட்சம் (45)ஒரு பட்டாசு கடை அருகே உள்ள கட்டடத்தில் எந்தவித அனுமதியும் இன்றி 247 பண்டல்களில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, லட்சத்தை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா். மேலும், அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.