கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

அக்டோபா் மாதத்தில் கடந்த 25-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.48,056 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:11 am IST

அக்டோபா் மாதத்தில் கடந்த 25-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.48,056 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனா்.

முன்னதாக கடந்த செப்டம்பரில், அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.35,861 கோடியை இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து திரும்பப் பெற்றிருந்தனா். அதேநேரம், ஜூலையில் ரூ.20,200 கோடியையும், ஆகஸ்டில் ரூ.29,630 கோடியையும் அவா்கள் முதலீடு செய்திருந்தனா்.

மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, அக்டோபா் மாத வெளியேற்றத்தையும் சோ்த்து நடப்பு 2026-ஆம் ஆண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் இதுவரை சுமாா் ரூ.3.08 லட்சம் கோடியை இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா். இது கடந்த 2025 முழுவதிலும் திரும்பப் பெறப்பட்ட ரூ.1.66 லட்சம் கோடியைவிட கணிசமாக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் சந்தையில்...: பங்குச் சந்தையைப் போலவே கடன் சந்தையிலும் அக்டோபரில் அந்நிய முதலீட்டாளா்கள் நிகர விற்பனையாளா்களாகவே உள்ளனா். முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.3,858 கோடியும், தன்னாா்வ தக்கவைப்பு வழிமுறை (விஆா்ஆா்) மூலம் ரூ.1,332 கோடியும் வெளிநாட்டு முதலீட்டாளா்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேநேரம், பொது வழிமுறையின் மூலம் ரூ.3,737 கோடியை அவா்கள் முதலீடு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.