தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு.

Published On :27 அக்டோபர் 2026, 5:31 pm IST

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவுக்கு முன்னதாக டாலரின் வலுவான நிலை ஆகியவற்றுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தலையீடு காரணமாக ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்திருக்கலாம் என்றும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவடைந்தது.

ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு மீண்ட நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் ரூபாய் மதிப்பு தள்ளாடியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.17 ஆக தொடங்கி, ரூ. 95.09 முதல் ரூ. 95.24 என்ற நிலையில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில் அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 3 காசுகள் உயர்ந்து. டாலருக்கு நிகராக ரூ. 95.12 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3வது நாளாக சரிந்து, டாலருக்கு நிகராக 22 காசுகள் குறைந்து ரூ. 95.15 ஆக இருந்தது.

கடந்த மூன்று அமர்வுகளில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 77 காசுகள் சரிந்துள்ளது.

Summary

The rupee closed marginally up by 3 paise at 95.12 against the U.S. dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.