600 கி.மீ. பயணிக்கும் வால்வோ இ.எஸ்.90! சொகுசு மின்சார கார் அறிமுகம்!

வால்வோ இ.எஸ்.90 கார் பற்றி..

Volvo ES90

வால்வோ இ.எஸ்.90 - X

Published On :24 அக்டோபர் 2026, 6:23 pm IST

வால்வோ நிறுவனத்தின் சொகுசு மின்சார காரான இ.எஸ்.90, 800 வோல்ட் மின் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 92 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரியுடன் கூடிய பின்புறச் சக்கர இயக்க மாடல் 106 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியுடன் கூடிய இரட்டை மோட்டார்ஸ் ஆல் வீல் டிரைவ் மாடல் எனத் தேர்வுகள் உள்ளன.

அதிகபட்சமாக 670 குதிரைத் திறனும், 870 நியூட்டன் மீட்டர் டார்க்கும் வழங்கும் செயல்திறன் மாடலும் கிடைக்கிறது. மாடலைப் பொறுத்து ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கி.மீ. வரை பயணிக்கலாம். அதிவேக சார்ஜிங் வசதியில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

காரில் 14.5 அங்குல தொடுதிரை, 9 அங்குல டிஜிட்டல் ஓட்டுநர் திரை, ஹெட்-அப் டிஸ்ப்ளே, காற்று இடைநீக்க அமைப்பு, பல்வேறு பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் 424 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருள் வைக்கும் இடமும், முன்புறத்தில் 27 லிட்டர் இடமும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.