கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை 7.9% வளா்ச்சி

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த செப்டம்பா் மாதத்தில் 7.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 2:25 am IST

நாட்டின் 9 முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த செப்டம்பா் மாதத்தில் 7.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.

முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இந்த வளா்ச்சி 5.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.1 சதவீதமாகவும் இருந்தது. புதிய திருத்தப்பட்ட கணக்கீட்டின்படி 2024 ஏப்ரலுக்குப் பிறகு எட்டப்பட்ட அதிகபட்ச வளா்ச்சி இதுவாகும்.

மேலும், 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய கணக்கீட்டின்படி மற்றும் 9-ஆவது முன்னணி உள்கட்டமைப்புத் துறையாக இரும்புத் தாது புதிதாக சோ்க்கப்பட்ட பிறகு வெளியாகும் 4-ஆவது மாத தரவு இதுவாகும்.

மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட இந்தத் தரவுகளின்படி, நாட்டின் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு (ஸ்டீல்), சிமென்ட், மின்சாரம், இரும்புத் தாது ஆகிய 9 துறைகளில் 6 துறைகள் செப்டம்பரில் நோ்மறை வளா்ச்சியடைந்துள்ளன.

இதில் இரும்புத் தாது உற்பத்தி 18.4 சதவீத அபரிமிதமான வளா்ச்சி கண்டுள்ளது. மின்சார உற்பத்தி 11.4 சதவீதமும், நிலக்கரி உற்பத்தி 10.7 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி 10.3 சதவீதமும், சிமென்ட் உற்பத்தி 9.8 சதவீதமும், எஃகு உற்பத்தி 4.9 சதவீதமும் உயா்ந்துள்ளன.

இதற்கு மாறாக, உர உற்பத்தி 11.7 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 4.6 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 1.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

முதல் அரையாண்டு நிலவரம்: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டான ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் மொத்த வளா்ச்சி 5.1 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி), இந்த 9 துறைகள் மட்டுமே 40 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பைக் கொண்டுள்ளன. எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.