தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!

சென்செக்ஸ் 876.37 புள்ளிகள் சரிந்து 73,852.90 ஆகவும் நிஃப்டி 257.20 புள்ளிகள் சரிந்து 22,888.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 5:49 pm IST

மும்பை: தனியார் துறை ஜாம்பவான்களான எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிப் பங்குகளின் சரிவு மற்றும் சர்வதேசச் சந்தைகளில் காணப்பட்ட எதிர்மறையான சூழலைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 876.37 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 22,888.95 ஆக முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,020.73 புள்ளிகள் சரிந்து 73,708.54 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 876.37 புள்ளிகள் சரிந்து 73,852.90 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 257.20 புள்ளிகள் சரிந்து 22,888.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் இன்று ஆக்சிஸ் வங்கி 3.85 சதவீதம் சரிந்தது. இருப்பினும், தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, தனது முக்கிய வருமானம் அதிகரிப்பு மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றால், நிதியாண்டின் 2 வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.4 சதவீதம் அதிகரித்து ரூ. 7,704.67 கோடியாக உயர்ந்ததாக அறிவித்தது.

எச்டிஎஃப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்தன.

30 பங்குகளை கொண்ட சென்செக்ஸில், அல்ட்ராடெக் சிமென்ட், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ட்ரென்ட், என்டிபிசி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்தன.

உலகச் சந்தையில் நிலவி வந்த பலவீனமான வர்த்தகச் சூழல் மற்றும் ஐடி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையால், இந்தியப் பங்குகள் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானது. காலாண்டு வருவாயைத் தொடர்ந்து தனியார் வங்கிகள் பெரும் அழுத்தத்தில் இருந்தன. இதற்கு மாறாக, பொதுத்துறை வங்கிகள், ஒப்பீட்டளவில் லாப வரம்புக்குள் செயல்பட்டன.

பல நாட்களாக நீடித்த விற்பனைக்குப் பிறகு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 1,165.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்தும், அதே நேரத்தில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தை சரிந்த நிலையில், அமெரிக்க சந்தை வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் குறியீடு 2.14 சதவீதம், எஸ்&பி 500 1.09 சதவீதம் மற்றும் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.34 சதவீதம் சரிந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.07 சதவீதம் சரிந்து ரூ. 108.7 டாலராக உள்ளது.

Summary

Benchmark equity indices ended sharply lower on Monday after two days of a rally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.