பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ. 96.26 ஆக நிறைவடைந்தது.

Published On :5 அக்டோபர் 2026, 6:33 pm IST

மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவடைந்தது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட டாலர் விற்பனை உதவியதாக இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் டாலரின் வலுவான நிலை ஆகியவற்றால் இது தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ. 96.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 96.30 ஆக சரிந்தது. இது முந்தைய வர்த்தக நாளின் முடிவான ரூ. 96.25 லிருந்து 5 காசுகள் குறைவாகும்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அந்நியச் செலாவணி மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Summary

The Indian rupee remained under pressure against the US dollar in early trade on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.